தமிழ்நாடு

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை ,அ.தி.மு.க. தான் மீண்டும் ஆட்சியமைக்கும் - வைத்தியலிங்கம்

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்" என்றார்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

 கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளதால், சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது:

கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate