தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ..? முதல்வர் விளக்கம்!!

தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அவர், "10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

சென்னை:-

தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அவர் கூறியதாவது:

 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

  • தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

  • கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  • தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  • வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.

  • 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண அக்.1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பற்றி மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தியபிறகு முடிவு எடுக்கப்படும்.

என்று ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate