தமிழ்நாடு

"திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இப்போதைக்கு இடைத் தேர்தல் இல்லை" - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், கொரோனா பாதிப்பின் காரணமாக, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும் என்று அனைவரலாம் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இப்போது இடைத் தேர்தல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ கே.பி.பி சாமி மற்றும் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ எஸ். காத்தவராயன், கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் மரணமடைந்தனர். அதனையடுத்து  அந்த சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

தேர்தல் நடைமுறைகளின்படி, தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால், அங்கு தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், இந்த ஆட்சி முடிவடைய இன்னும் 1 ஆண்டுக்கும் குறைவாகவே காலம் உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் இரண்டு தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்தப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இப்போது இடைத் தேர்தல்  இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate