தமிழ்நாடு

"எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருந்து வழங்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளேன்" - அமைச்சர் கடம்பூர் ராஜு

"பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். தமிழ் திரை உலகிற்கு பெரும் பணியாற்றியுள்ளார். அவரின் கலைச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்கு துவங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். திரைப்படத்துறையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கும் சினிமா போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகள் மேற்கொள்ளவும்  அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு துவங்குவது குறித்து தற்போது வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக எந்த ஒரு சரியான வழிகாட்டுதலும் வரவில்லை சரியான வழிகாட்டுதல் வந்த பின்பு, தமிழகத்தில் மருத்துவ குழுவினர் வழங்கக்கூடிய அறிவுரைகளுக்கும் ஏற்ப தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார்.

தமிழகத்தில் தற்போது ஓ.டீ.டீ. யின் வாயிலாக திரைப்படங்கள் வெளியிடும் விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. ஓ.டீ.டீ. பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயார் என்றால் பேச்சுவார்த்தையை நடத்த அரசு தயாராக உள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். தமிழ் திரை உலகிற்கு பெரும் பணியாற்றியுள்ளார். அவரின் கலைச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான்  தமிழக அரசு சார்பில் அவருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் பரிந்துரை செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார்" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee