அரசியல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி திடீர் சந்திப்பு!!

இன்று காலை துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், தற்போது தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் திடீரென சந்தித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துணை முதல்வரை சந்திக்காமல் முதல்வர் எடப்பாடியை தனியாக சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்த கேள்வி எழுந்ததன் காரணமாக, சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே முதல்வர் குறித்து நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ்பாண்டியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதையடுத்து,  ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அதிமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் எனது ஆதரவு உண்டு" என்று தெரிவித்தார்.

இந்நிலையயில், தற்போது தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  அவரது வீட்டில் திடீரென சந்தித்துள்ளார்.

வழக்கமாக, முதல்வர் தலைமையில் நடக்கும் அனைத்து கூட்டங்களுக்கும் கலந்துக் கொள்வார். ஆனால், இன்று முதல்வர் உடனான கூட்டத்தை புறக்கணித்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துணை முதல்வரை சந்திக்காமல் முதல்வர் எடப்பாடியை தனியாக சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate