அரசியல்

"யார்ரா அந்த நாய்" என்று தரக்குறைவாக மேடையில் திட்டிய ஆ.ராசா, திமுக தொண்டர்களை நடத்தும் விதம் இதுதானா..?

மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் விதமாக வேளாண் மசோதா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை தி.மு.க இரண்டு தினங்களாக தன் கட்சியினரை திரட்டி செய்து வருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் 'ஆ.ராசா வாழ்க' என்று உரக்கமாக கத்திய தொண்டரை "யார்ரா அவன், அவனைத் தூக்கி வெளியோ போடுங்க..." என பொதுக்கூட்டத்தின் மத்தியில் ராசா கத்தியது உடன்பிறப்புகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுகவினர் தங்கள் தொண்டர்களை நடத்தும் விதமே தனி தான். ஓட்டுக்கு கெஞ்சுவதும் வெற்றிப் பெற்ற பின் எட்டி உதைப்பதும் அவர்களுக்கு கைவந்தக் கலை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்துக்களின் விழாக்களுக்கு கட்சி நிர்வாகிகள் யாராவது பொது வெளியில் வாழ்த்து தெரிவித்தால் கூட அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும் ஸ்டாலின் அவரது வீட்டில் நடப்பவற்றை பற்றி கேட்டால் அந்த இடத்தில் ஆளே இருக்க மாட்டார்.

என்னதான் ஆயிரம் ரூபாய் கொடுத்து செருப்பு வாங்கி வந்தாலும் அதை வீட்டின் வெளியே வைப்பது போல, தன் தந்தை பகுத்தறிவு பகலவர் கலைஞர் சம்பாதித்த தொண்டர் படையை எடுபுடி வேலைகளுக்கு ஏகபோகமாக பயன்படுத்தி விட்டு பொது வெளியில் அசிங்கப்படுத்துவதையே வேலையாக கொண்டுள்ளார் திராவிடக்  கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை புதிதாக தொடங்கப்பட்ட வேளையில், மெட்ரோ ரயிலில் தூதுகலமாக பயணிக்க ஏறிய ஸ்டாலினை தலைவா எனகூறிக் கொண்டு நெருங்கிய தொண்டரை  பளாரென  கன்னத்தில் அடித்து துரத்திய ஸ்டாலினின் வீடியோ தான் அந்த நேரத்தில் மிகவும் வைரலாக இருந்தது.அதற்கு பின், தலைவன் எவ்வழியோ நாங்களும் அவ்வழியே என்ற படி திமுக கழக உடன்பிறப்புகள் பிரியாணிக் கடையில் பாக்சிங், பஜ்ஜிக் கடையில் தகராறு, பியூட்டி பார்லரில் பெண்ணிடம் தகராறு, கடப்பாக்கல்லை திருடுவது என கோதாவில் குதித்து சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்தனர்,.....தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், உடன்பிறப்புகள் எப்படியோ அப்படித் தான் நாங்களும் என்று தற்போது திமுக தலைவர்களும்  களத்தில் இறங்கியுள்ளனர்.  

மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் விதமாக  வேளாண் மசோதா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை தி.மு.க இரண்டு தினங்களாக தன் கட்சியினரை திரட்டி செய்து வருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்றார்.

அந்த கூட்டத்தில் மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக குறிப்புகளை தயார் செய்து வைத்து கொண்டு உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருத்தார். அப்போது இவர் வழக்கம்போல இப்படித்தானே பேசுவார் என்று நினைத்த உடன்பிறப்பு பழக்க தோஷத்தில் "ஆ.ராசா வாழ்க" என உரக்க கத்தியுள்ளார். ஒரு ப்ளோ'வாக குறிப்பெடுத்து பேசுகையில் இப்படி அதனை தடுக்கும் விதமாக உடன்பிறப்பு கத்தியது ஆ.ராசா'விற்கு சுரீர் என கோபத்தை ஏற்படுத்தியது. ஆ.ராசா

உடனே கோபம் பொங்க "யார்ரா அவன்.....அவனைத் தூக்கி வெளியோ போடுங்க..." என பொதுக்கூட்டத்தின் மத்தியில் கத்தியது உடன்பிறப்புகளுக்கு  பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டத்தில் குழுமியிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றதை கண்ட உடன்   சமாளித்து விட்டு  ஆ.ராசா தன் உரையை மீண்டும் தொடர்ந்தார். என்னதான் தி.மு.க தலைவர்கள் தங்கள் தொண்டர்களை நாய் என்று மனதில் நினைத்தாலும் அதனை இப்படியா பொது கூட்டத்தில் மக்கள் மத்தியில் கூறுவது என உடன்பிறப்புகளே திகைத்து நின்றனர்.உன்னைய வாழ்த்தி கூவுனது ஒரு குத்தமா டா, என்று மனதில் குமுறிக் கொண்டே அந்த இடத்தில்  இருந்து நகர்ந்து சென்றார் அந்த கலைஞர் கால விசுவாசி.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee 4710 Gold Rate
8 கிராம்
Rupee 37680 Gold Rate
1 கிராம்
Rupee 62.60 Gold Rate
1 கிலோ
Rupee 62600 Gold Rate