இந்தியா

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா உறுதி...

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அறிகுறிகள் இல்லாததால் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார் என்று துணை குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

டெல்லி:-

இன்று காலை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளில் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என்று துணை குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதனிடையே, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்தது. எனினும் அவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Venkaiah Naidu Age, Caste, Wife, Biography & More » StarsUnfolded

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate