ஆன்மிகம்

காலையில் ஏன் சுப்ரபாதம் பாடப்படுகிறது தெரியுமா? - புராண கதை இதோ

சுப்ரபாதம் யார் மீது எந்த சூழலில் பாடப்பட்டது. விசுவாமித்திரர் ராமனை எழுப்ப எப்படிப்பட்ட வார்த்தைகளைப் போட்டு சுப்ரபாதத்தை பாடினார் அதன் அற்புதம் என்ன என்பதை விளக்கும் புராண கதையை இங்கு பார்ப்போம்.

பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியதாகக் கருதப்படுகிறார். இவர் பல கடும் தவங்களையும், யாகங்களையும் புரிந்து வந்தார்.
இவர் வேள்வி நடத்தும் போது தாடகை உள்ளிட்ட அரக்கர்கள் அவரின் வேள்விக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் கலங்கிய விஸ்வாமித்திரர் ஒரு முறை அயோத்தியை ஆண்டு வந்த தசரதனின் அரசவைக்கு வந்து அரக்கர்களிடமிருந்து தங்களின் வேள்வியைக் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
வேள்வியைக் காக்க ராமனை அனுப்பி வைக்க வேண்டினார். அதன் படி ராமனையும், லட்சுமணனையும் அனுப்பி வைக்கப்பட்டார்.
வெகுதூரம் விசுவாமித்திரருடன் வனத்தில் நடந்து சென்றனர். நீண்ட நேரம் கால்நடையாகச் சென்றதால் கங்கைக்கரையில் ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அரசகுமாரர்களாக இருதாலும் அதிக கலைப்பு காரணமாக ராம லட்சுணர்கள் வனத்தில் தங்களை மறந்து நன்றாக உறங்கினர்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அவர்களை அதிகாலையில் விஸ்வாமித்திரர் எழுப்ப முற்பட்டார். ஆனால் எழுந்திருக்காததால், அவர் கங்கை நதிக்கு சென்று நீராடி, ஜப தபங்களை எல்லாம் செய்து முடித்துவிட்டும் திரும்பி வந்தார்.
அப்போதும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். ராம- லட்சுணர்களை எழுப்பத் தொடங்கிய அவர் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருந்தாராம். இருப்பினும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது உருவானது தான் “கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா” எனும் சுப்ரபாதம்.
தனக்கு தெய்வக் குழந்தையான ராம - லட்சுமணனை எழுப்பும் பாக்கியம் கிடைத்ததே என எண்ணி ஆனந்தம் கொண்டார். ஆனால் அவர்கள் எழுந்திருக்காத நிலையில் தினமும் ராமனை எழுப்பக்கூடிய கெளசல்யா எத்தனை பேறு பெற்றிருப்பார் என நினைத்துக் கொண்டார்.
அதனால் ராமனை தினமும் எழுப்பக் கூடிய ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என சுப்ரபாதத்தைப் பாடி எழுப்பத் தொடங்கினார்.
விசுவாமித்திரர் அவர்களை கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!.
என கெளசல்யா சுப்ரஜா என்ற அவர்களை எழுப்பக் கூடிய பாடலை விசுவாமித்திரரின் வார்த்தைகளை கொண்டே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.
இந்த பாடலைத் தான் திருப்பதியில் இன்றும் திருப்பள்ளி எழுச்சி பாடலை ஒலிக்கின்றது. அதுவும் தமிழகத்தில் மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் தெய்வீக குரலில் ஒலிக்கிறது.
ராமனை மட்டும் இந்த சுப்ரபாதத்தில் குறிப்பிடப்படுகின்றதே ஏன் லட்சுமணனை குறிப்பிடப்படவில்லை என நம்மில் பலருக்கு கேள்வி எழும்.
அதற்கு காரணம் திருமாலின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம் தான் லட்சுமணன்.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமனை எழுப்பிய அவர், விஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனை எழுப்பவில்லை. அவரை எழுப்பவும் முடியாது. திருமாலை எழுப்பினால் ஆதிசேஷனும் எழும்பி விடுவார்.
அதனால் தான் லட்சுமணனை இதில் சேர்க்கவில்லை.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee