உலகம்

ஆப்கானிஸ்தானத்தில் ஒரேநாளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு- பொது மக்கள் பீதி...

ஆப்கானிஸ்தானத்தில் பல்வேறு மாகாணங்களில் ஒரே நாளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் ஏராளமான ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் இச்சூழலில் ஆப்கானிஸ்தானத்தில் திடீரென்று வரும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.

காபுல்:-

ஆப்கானிஸ்தானத்தின் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 5 ஆப்கன் ராணுவ வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் உமர் கூறுகையில்:-

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தையும் படுகாயம் அடைந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதேபோல ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் நடைபெற்ற கண்ணி வெடி தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

Afghanistan: Kabul car bomb kills 12, including children | News | Al Jazeera

கந்தகார் மாகாணத்திலுள்ள ஷா வாலி காட் மாவட்ட காவல்துறை தலைவர் கர்னல் பாச்சா கான் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாச்சா கான் மற்றும் அவருடன் சென்ற மூன்று காவலர்களும் கண்ணிவெடியில் சிக்கினர். இதில் இவர்கள் நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல ஹீரத்-கந்தகார் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹீரத் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் தப்பா கார்க்கி பகுதியில் வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் பேருந்து மீது மோதியத்தில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என 10 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசுக்கும்-தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை  தொடங்கியது முதல் நடைபெற்றுவரும் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து இதுவரையில் எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee