உலகம்

32,000 ஊழியர்களை ‘கட்டாய விடுப்பில்’ அனுப்பும் அமெரிக்காவின் 2 பெரிய விமான சேவை நிறுவனங்கள்...

கொரோனா பரவலால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஆகியவை 1600 பைலட்கள் உட்பட 32,000 ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்களின் இந்த முடிவால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நியூயார்க்:-

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதில் அமெரிக்காவின் பெரும் விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளன.

இந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் கோரிய நிவாரணத்தொகைகள் எதுவும் கிடைக்கப் பெறாத காரணத்தால்,  இனியும் நிவாரணத் தொகை கிடைக்கும் நம்பிக்கை ஏறக்குறைய முடிந்து போனதால் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் 32 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களை கட்டாய விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

இது தற்காலிகமானது தான் எனினும் மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உள்ளதாக ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 13% பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதோடு மட்டுமல்லாமல் டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 10,000 கணக்கானோரும் வேலை விடுவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். யுஎஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு சம்பளம் கொடுக்க மேலும் 25 பில்லியன் டாலர்கள் தொகையை அரசிடமிருந்து கோரியது.

நிவாரணம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இந்த விமான நிறுவனங்கள் ஊழியர்களிடம் மெமோவில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் சுமார் 1600 பைலட்கள் 19,000 ஊழியர்களை பணி விடுவிப்பு செய்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் 13,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அமெரிக்கா அரசின் கருவூலத்துறை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பெரும்பாலான விமான நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee