லைப் ஸ்டைல்

சைவ உணவே சிறந்தது! சைவ உணவுகள் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்...

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 ஆம் தேதி உலக சைவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அருமையை புரிந்த சைவ உணவு பிரியர்களும் சைவ உணவை தங்கள் அன்றாட வாழ்வில் சேர்த்து வருகிறார்கள். நாம் சாப்பிடும் காய்கறிகளில் இருந்து பழங்கள், பயிர்கள் வரை எல்லாமே சைவ உணவு தான். இவற்றின் மகத்துவத்தை சற்று காண்போமே..

சைவ உணவுகளில் ஊட்டச்சத்துக்கள்:

சைவ உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். இந்த சைவ உணவு நாளில் சைவ உணவின் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் புதுவிதமான சைவ உணவுகளையும் முயற்சி செய்கிறார்கள். ஏனெனில் இவை எடை இழப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. சைவ உணவைப் பின்பற்றுவது இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இப்படி ஏகப்பட்ட நன்மைகள் தரும் சைவ உணவை பற்றி ஏராளமான கட்டுக்கதைகளும் நிலவத் தான் செய்கிறது. இந்த கட்டுக்கதைகளையும் உண்மை என நம்பி நாம் ஏமாந்து வருகிறோம். எனவே இதை அறிந்து கொண்டு அதிலிருந்து நாம் வெளிவருவது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சரி வாங்க சைவ உணவு பற்றி நிலவி வரும் கட்டுக்கதைகள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.

சைவ உணவு சலிப்பை ஏற்படுத்தும் உணவா?

தேசிய சுகாதார போர்ட்டலின் படி, சைவ உணவு உண்பவர்கள் வேறு எவரையும் போலவே உணவை ருசிக்கிறார்கள். சைவ உணவு உண்பவர்களும் அவற்றை விரும்பி ரசித்து ருசித்து தான் சாப்பிடுகிறார்கள். மேலும் சைவ உணவை சமைக்கும்போது உணவை சுவையாகவும் சத்தானதாகவும் மாற்ற வெவ்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுடன் பரிசோதனை செய்ய முடியும். எனவே சைவ உணவில் ஏராளமான வெரைட்டிகள் வித்தியாசமான சுவைகள் உள்ளன. எனவே சைவ உணவு சலிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு கட்டுக்கதையே.


சைவ உணவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தவை:

பொதுவாக மக்களிடையே சைவ உணவு என்றாலே அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தவை என்று நினைக்கின்றனர். ஆனால் பால், பெர்ரி, நட்ஸ் , விதைகள், பருப்பு வகைகள், சியா விதைகள், தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், பெல் மிளகு மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் சில குறைந்த கார்ப் உள்ள சைவ உணவுகள் ஆகும். எனவே நீங்கள் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் பெற நீங்கள் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.

உடற்பயிற்சி செயல்திறனை பாதிக்கிறது:

சைவ உணவைப் பின்பற்றுவது உங்க பலவீனத்திற்கு வழிவகுக்கும் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவாது என்று மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. ஆனால் சைவ உணவிலும் நீங்கள் சரிவிகித ஊட்டச்சத்துக்களை எடுத்து வந்தால் உங்க உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்த முடியும். புரோட்டீன்கள் நிறைந்த சைவ உணவுகளை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சைவ உணவும் ஆரோக்கியமானது:

நிறைய மக்கள் சைவ உணவில் இருக்கும் அனைத்து விஷயங்களும் ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் சைவ உணவிலும் உங்க ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷயங்கள் இருக்கிறது. சந்தையில் பல சைவ உணவுகள் அதிக அளவில் பதப்படுத்தப்பட்டு கூடுதல் சர்க்கரை மற்றும் உப்புடன் ஏற்றப்படுகின்றன. இது உங்க ஆரோக்கியத்தை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே சைவ உணவு என்றால் கூட கவனமாக தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate