உலகம்

கொரோனா தடுப்பூசிக்காக லட்சக்கணக்கில் சுறாக்கள் கொல்லப்படுகிறதா..? பகீர் அறிக்கை வெளியீடு!

உலகளவில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்தபாடில்லாத நிலையே தொடர்கிறது. இதனை மட்டுப்படுத்த பல மருந்துகளை மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்து சிகிச்சை அளித்து வந்தனர். கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்காக லட்சக்கணக்கில் சுறா மீன்கள் கொல்லப்படுகிறது என வெளிவந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை போதுமான அளவில் தயாரிக்க உருவாக்க 5 லட்சம் சுறாக்கள் படுகொலை செய்யப்படலாம் என் சுறா மீன் ஆதரவு குழு ஒன்று தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஷார்க் அலீஸ் என்ற பாதுகாப்புக் குழு, உலகின் ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை உருவாக்க, சுமார் 2.5 லட்சம் சுறாக்கள் தங்கள் கல்லீரல் எண்ணெயைக்காக கொல்லப்படும் என்று எச்சரித்துள்ளது. ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்பட்டால், சுறாக்களின் எண்ணிக்கை 5 லட்சமாக இரட்டிப்பாகுமாம்.

கொரோனா தடுப்பூசிகள் அட்ஜுவென்ட் எனப்படும் நோயெதிர்ப்பு வேதிப்பொருளைக் கொண்டிருக்கின்றன. இது அதன் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம் கொரோனா தடுப்பூசியை மிகவும் வீரியமாக செயல்பட செய்வதாககூறப்படுகிறது. இப்படியாக தடுப்பூசிகள் மூலம் உடலில் அதிக அளவில் ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும். இவை நோய்க்கு எதிராக நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கையாள திறம்பட உதவுகின்றன. 

அட்ஜுவ்வென்ட் எனும் வேதிப்பொருள் ஸ்குவலீன் எனும் எண்ணையில் இருக்கிறது. இது சுறாக்களின் கல்லீரலில் இருக்கும் ஒரு இயற்கை எண்ணெயாகும். அழகு சாதனங்கள், இயந்திர எண்ணெய் மற்றும் பிற பொருட்களில் மனிதர்கள் ஸ்குவாலீனைப் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 லட்சம் சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வெகுஜன உற்பத்தி தடுப்பூசிகளின் தேவை திடீரென அதிகரித்ததால், பாதுகாவலர்கள் சுறாக்கள் இன்னும் வேகமாக அழிக்கப்படும் என அஞ்சுகிறார்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee