தமிழ்நாடு

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் உடல் நல்லடக்கம்!!

'வீரத்துறவி' என்று அழைக்கப்படும், இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன், 94, ( நேற்று செப்.30) காலமானார். அவரது பூத உடல் இன்று முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி குழுமணி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ராமகோபாலனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணியினர் இறுதி மரியாதை செலுத்தினர்.

சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் ராமகோபாலன். இவர், 1940ல் இருந்து, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில், தீவிரமாக செயல்பட்டு வந்தார். 1980ல் இந்து முன்னணி அமைப்பை துவக்கினார். தமிழகத்தில், ஹிந்துக்களுக்கு ஆதரவாகவும், மத மாற்றங்களுக்கு எதிராகவும், குரல் கொடுத்தார். தமிழகத்தில், விநாயகர் சதுர்த்தியின்போது, இந்து முன்னணி சார்பில், அனைத்து பகுதிகளிலும், ஊர்வலங்கள் நடத்தி, ஹிந்துக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தினார். இவருக்கு பல்வேறு அமைப்புகள் மிரட்டல் விடுத்ததால், தமிழக காவல் துறை சார்பில், பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. திருமணம் செய்து கொள்ளாமல், துறவு வாழ்க்கை வாழ்ந்த ராமகோபாலானை, இந்து முன்னணியினர், 'வீரத்துறவி' என்று அன்புடன் அழைத்து வந்தனர்.

அவருக்கு, கடந்த, 27-ஆம் தேதி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, சென்னை, போரூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி, அவர் முக்தி அடைந்தார்.

திருச்சி குழுமணி அருகே சீராத்தோப்பு பாரத பண்பாடு பயிற்சிமையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ராமகோபாலனுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, கருப்பு முருகானந்தம், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்து முன்னணியினர் இறுதி மரியாதை செலுத்தினர்.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate