இந்தியா

தாழ்த்தப்பட்ட தொழில் முனைவோருக்கு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொடங்க மத்திய அரசு உதவி!!

தலித் தொழில் முனைவோருக்கான அம்பேத்கர் இன்னவேஷன் மற்றும் இன்குபேஷன் திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுதுறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அறிமுகப்படுத்தியுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களில் உதவியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற அடையாளம் காணப்படுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் தொழில்நுட்ப தொழில் முனைவோர் தொடங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் உதவியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற அடையாளம் காணப்படுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்க விரும்பும் தலித் தொழில்முனைவோருக்கு தங்களது தொழில் தொடங்கும் யோசனைகளை லாபகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர மூன்று வருடங்களுக்கு 30 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இந்த முயற்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு மேலும் 5 கோடி ரூபாய் வரை நிதியுதவி அளிக்கப்படும்.

தொழிலில் ஈடுபடுவது பாதுகாப்பான எதிர்காலத்திற்க்கு  உதவி செய்யாதே என்ற அச்சத்தில் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பில் இருக்கும் பலரும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு துறையில் ஈடுபடவும் அது சார்ந்த தொழில் துறையில் ஈடுபடவும் தயங்குவதால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.

2020 முதல் 2024 வரையிலான காலத்திற்கு மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்துக்கு ரூபாய் 308.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் விநியோகிக்கப்படும். இதன்படி உயர்கல்வி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் படித்தும் பணிபுரிந்தும் வரும் தலித் மற்றும் ஊனமுற்ற இளைஞர்களின் வியாபாரம் யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை ஒரு புதிய தயாரிப்பு சேவை அல்லது தீர்வாக மாற்றி லாபகரமான தொழிலாக முன்னிலைப்படுத்த அரசு உதவும் என்று கூறப்படுகிறது.

இதற்காக அம்பேத்கர் சோஷியல் இன்னோவேஷன் இன்குபேஷன் முயற்சியின் கீழ் ஒரு தேசிய அளவிலான குழு உருவாக்கப்படும் என்றும் இந்தக் குழு மத்திய மாநில அரசுகளும் அவற்றின் அமைச்சர்களும் இந்தத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று திட்டமிடுவதோடு அரசுகளுடனும் தொழிற்சாலை நிர்வாகங்கள் உடனும், நிறுவனங்களின் CSR அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி இந்த திட்டத்திற்கு தேவையான ஆதரவு மற்றும் ஆதாரத்தை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தொழில்களுக்கு எனவும் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டு அந்த குழு தலித் தொழில் முனைவோர் இடமிருந்து ஸ்டார்ட்-அப் யோசனைகளை பெற்று அவற்றை எப்படி லாபகரமான தொழிலாக மாற்றலாம் என்ற விஷயத்தில் அவர்களுக்கு உதவி புரியும். இந்த உதவி மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அந்த மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

அதேபோல் தொழில் தொடங்கும்போது கணக்காளர்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வல்லுனர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் ஆகியோர் மூலம் தலித் தொழில்முனைவோரின் ஸ்டார்ட் அப் யோசனைகளை வெற்றிகரமாக்க உதவிகள் வழங்கப்படும். மேலும் தொழில் தொடங்கப் படும் நிலையில் வங்கிகள் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் மூலம் அனைத்து விதமான உதவிகளும் தலித் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee