தமிழ்நாடு

'வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படும் அரசு அல்ல தமிழக அரசு' -அமைச்சர் விஜயபாஸ்கர்

ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் Post Covid Centre-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் செயல்பாடுகளை எடுத்து கூறினார். மற்றவர்களை போல தமிழக அரசு வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படவில்லை, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட களத்திற்கு சென்றே அரசு பணியாற்றியது என்று கூறினார்.

சென்னை : தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாநிலத்தில் கொரோனா வைரஸ், டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2 கோடி ரூபாய் செலவில் சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் Post Covid Centre-ஐ சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'இந்தியாவிலேயே சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றிற்கு அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சை காரணமாக 90 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்' என்றார். மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் அதில் தெரிவித்தார்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாநிலத்தில் கொரோனா வைரஸ், டெங்கு உள்ளிட்ட நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மற்றவர்களை போல தமிழக அரசு வீடியோ கான்பரன்சிங்கில் செயல்படவில்லை, மாறாக கொரோனா பெருந்தொற்று காலத்திலும் களத்திற்கு சென்று அரசு பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee