விளையாட்டு

இரண்டாம் இடத்தில் கொல்கத்தா...! ஐபில்எல் புள்ளி பட்டியல்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் 47 ரன்களும், கடைசி நேரத்தில் பொறுப்புடன் விளையாடிய சீனியர் வீரர் இயான் மோர்கன் 34 ரன்களும் எடுத்து சீரான விளையாட்டை வெளிப்படுத்தினர் 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதுதவிர ராஜ்புட், உனட்கட், டாம் கர்ரான் மற்றும் திவாடியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டாம் கர்ரான் (54*), பட்லர் (21) மற்றும் திவாட்டியா (14) ஆகியோரை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வந்தவேகத்தில் வெளியேறியதால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
22-Oct-2020
பெட்ரோல்
Rupee 84.14(லி)
டீசல்
Rupee 75.95(லி)
பி.எஸ்.இ
40976.02 40150.48
என்.எஸ்.இ
11775.75 12018.65
1 கிராம்
Rupee 4705 Gold Rate
8 கிராம்
Rupee 37640 Gold Rate
1 கிராம்
Rupee 63.50 Gold Rate
1 கிலோ
Rupee 63500 Gold Rate