லைப் ஸ்டைல்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்ட பின் தங்கள் உடல்நலனை பேண வேண்டியது மிக அவசியம். சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுவது உடலுக்கு தெம்பை தருவதில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியினையும் அதிகப்படுத்துகிறது.

கொரோனா வைரஸ்/கோவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஜிங்க், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சப்ளிமெண்ட்டுகளை உட்கொள்வது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு, இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வருகிறார்கள். அதோடு கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் விரைவாக குணமடைய இந்த மாத்திரைகளை மருத்துவர்களும் வழங்கி வருகிறார்கள்.

இந்திய அரசாங்க தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் வீதம் சுமார் 82% ஆகும். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்நோயில் இருந்து மீண்டவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சொல்லப்போனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் இதுவரை எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை, ஆனால் இனிமேல் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் கூறியபோது, அன்றாடம் எளிய மற்றும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் அன்றாடம் உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். என்ன தான் உடலின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க மாத்திரைகள் இருந்தாலும், ஆரோக்கியமான எளிய உணவுகளைத் தேர்வு செய்து உண்பதன் மூலம், நீண்ட காலத்திற்கு அதன் பலனைப் பெறலாம் என்றும் கூறுகிறார்.தொற்றுகளில் இருந்து விலகி இருக்க எந்த மாதிரியான உணவுகளை அன்றாடம் உட்கொள்வது என்று நீங்கள் கேட்கலாம். ஒருவரது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நோயில் இருந்து விரைவில் குணமாவதற்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்களுள் ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்றவை பெரிதும் உதவி புரியும். இப்போது இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம். அதைப் படித்து கொரோனாவில் இருந்து நீங்கள் மீண்டவராயின், பின்வரும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

இதனுடன் வைட்டமின்கள் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்வதும் மிக அவசியம். மேலே கூறிய உணவுகளுடன், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிதமான உடற்பயிற்சியும் அவசியம். எனவே ஜாக்கிங், ஜம்பிங் ரோப், சைக்கிளிங் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளான யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இவை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். அதோடு மன அழுத்தத்தைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். முக்கியமான தினமும் போதுமான அளவு தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee