சினிமா

ஓடிடி-யில் வெளியாகும் பாலாவின் வர்மா.. !

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கி இருந்தார். அப்படம் விறுவிறுப்பாக இல்லை என கூறி தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா இயக்கி இருந்தார். அப்படம் முடிவடைந்த வெளிவர இருந்த நிலையில், ‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்தது 

‘வர்மா’ படத்தை வேறு ஒரு இயக்குனரை வைத்து திரும்ப எடுக்கப் போவதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. சொன்னபடியே ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர்.  ‘ஆதித்ய வர்மா’  படத்தின் இசை, துருவ் விக்ரமின் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. சிம்ப்லி சவுத் என்கிற ஓடிடி தளத்தில் வர்மா படம் வருகிற அக்டோபர் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee