தமிழ்நாடு

ராகுல் கைது அவ்ளோ தாங்க, ஆனா எந்த ஊருன்னு தெரியாது...ஆர்ப்பாட்டத்தில் முழித்த காங்கிரஸ் கட்சியினர்..!

உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேட்டியின் போது ராகுல் கைது செய்யப்பட்ட ஊர் பெயர் தெரியாமல் கட்சியினர் முழித்தனர்.

ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த போது ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட ஊரின் பெயர் தெரியாதல் நிர்வாகிகள் திரு திருவென விழித்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், ஆத்ராஸ் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் வீட்டுக்கு செல்லும் வழியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில்நிலையம் முன்பாக, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் முடிவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்க வந்த நிர்வாகிகள் ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட ஊரின் பெயர் தெரியாமல் திருதிரு என விழித்தனர். இந்த சம்பவம் சக நிர்வாககிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee