Trending News

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை....!!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து கட்சியின் அடிமட்டத் தொண்டனாக தன் அரசியல் பயணத்தை தொடங்கி தமிழகத்தின் முதல்வராக எவ்வாறு எவ்வாறு உயர்ந்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை  அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார்.  கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து வட்டம், மாவட்டம், என படிப்படியாக முன்னேறி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் ஆகி இக்கட்டான சூழலில் இருந்த தமிழகத்தை  திறம்பட நடத்தி, கவிழ இருந்த ஆட்சியை தலைதூக்கி நிறுத்தினார் எடப்பாடியார்.

எம்.ஜி.ஆர் மறைவிற்கு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நேரத்தில் ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட பழனிசாமி அது தொடங்கி கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைத்து  வருகிறார்.




சேலம் மாவட்டம் எடப்பாடியில்  இருந்து கட்சியின் அடிமட்டத் தொண்டனாக  தன் அரசியல் பயணத்தை தொடங்கி தமிழகத்தின் முதல்வராக அவர் எவ்வாறு எப்படி உயர்ந்தார் என்பதை தற்போது காணலாம்:-

66 வயதான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின், நெடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமி 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அண்ணா திராவிடக் கட்சியின் கொள்கைகளாலும், எம்.ஜி.ஆர் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவும் கட்சியில் சேர்ந்தவர் தன்னை முழு முனைப்புடன் கட்சி பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்.
                                       

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு  ஏற்பட்ட நேரத்தில் ஜெயலிலதாவின் அரசியல் பயணத்தில் அவர் பக்கம் நின்று அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வலுப்பெற முக்கிய பங்காற்றினார்.

1989-ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக பழனிச்சாமி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, 1991-ஆம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி 1991, 2011, 2016-ஆம் ஆண்டுகளில், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருச்செங்கோடு தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
                                             

அதன் பின், 1999 மற்றும் 2004-ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எடப்பாடி பழனிச்சாமி படுதோல்வியடைந்தார்.

2011- 2016 வரை ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சகம் மாற்றப்பட்ட போதிலும் மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் விசுவாசியாக ஊர் அறியப்படும் எடப்பாடி பழனிச்சாமி, 2016-ஆம் சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

2016-ஆம் ஆண்டு ஜெயலிலதாவால் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பழனிசாமி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில் சட்டப்பேரவைக்க குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் எழுந்த தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று சுமார் நான்கு ஆண்டுகள் தமிழகத்தை திறம்பட ஆட்சிப் புரிந்துள்ளார் என்பதே எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2021) மே மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா என்ற இரு மாபெரும் ஆளுமைகளுக்கு பிறகு அந்த கட்சி தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் சட்டமன்ற தேர்தளுக்கு அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் முதல்வர் வேட்பாளராக முறையாக அறிவித்திருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழலில்  அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக  எடப்பாடி பழனிசாமியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate