Trending News

'தம்பி வா தலைமை ஏற்க வா'.... அன்று அண்ணா இன்று ஓபிஎஸ்!!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தலைமை ஏற்றுக்கொண்ட புதிதில் திமுக உள்பட பல கட்சிகளும் கட்சி உடையும், ஆட்சிக் கலையும், இரண்டு ஆண்டுகள் கூட முதல்வர் பதவியில் எடப்பாடியால் இருக்க முடியாது என்றெல்லாம் விமர்சித்து நகையாடினர். ஆனால் அவர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்கி முழுமையாக 4 ஆண்டுகள் வெற்றிகரமாக தமிழகத்தை வழிநடத்தி பல சாதனைகளை புரிந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

1956-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த  தி.மு.க. மாநாட்டில் அண்ணாதுரை, “தம்பி வா.. தலைமை ஏற்க வா.. உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் வா..” என்று நெடுஞ்செழியனை கட்சித் தலைமை ஏற்க அழைத்தார். ஆனால் அதை தவறாக புரிந்துக் கொண்ட கருணாநிதி தன் குடும்பத்தினரை தம்பி வா, தங்கை வா, மகனே வா, மகளே வா என எல்லாரையும் சேர்த்துக் கொண்டு குடும்ப அரசியல் செய்தார். இந்த டயலாக்'கை சமீபமாக ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் துரைமுருகனும் பேசினார். 


ஆனால், தற்போது அதிமுக முதல்வர் வேட்பாளர்  விவகாரத்தில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை "தம்பி வா...தலைமை  ஏற்க வா" என்று நெடுஞ்செழியனை அண்ணா அழைத்தது போல மக்கள் நலனுக்காகவும், கட்சியின்  நலனுக்காகவும் மூத்தவராக இருந்தாலும் பதவி ஆசையை துறந்து வேட்பாளர் பதவியை  எடப்பாடிக்கு  வழங்கியிருக்கிறார் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்.ஜெயலலிதா மறைவிற்கு பின், முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி முழுமையாக 4 ஆண்டுகள் தமிழகத்தை திறம்பட ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஆண்டு மே  மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் காரணமாக அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பூகம்பமாக வெடித்தது. கடந்த வாரம் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அக்டோபர் 7ம் தேதி யான இன்று வேட்பாளர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக நேற்று (06.10.2020) காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.

இன்று காலையிலும் ஆலோசனை நீடித்தது. சென்னையில் உள்ள தங்களது இல்லங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசித்தனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதிக்கட்டமாக ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர்.

இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டனர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இந்நிலையில் காலை 10 மணியளவில் அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் என கூறினார். 
 
பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என அறிவித்தார். கட்சியின் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு அளித்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்று மிகவும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் தலைமை ஏற்றுக்கொண்ட புதிதில்  திமுக உள்பட பல கட்சிகளும் கட்சி உடையும், ஆட்சிக் கலையும், இரண்டு ஆண்டுகள் கூட முதல்வர் பதவியில் எடப்பாடியால்  இருக்க முடியாது என்றெல்லாம் விமர்சித்து நகையாடினர். ஆனால்  அவர்களின் கூற்றுக்களை தவிடு பொடியாக்கி முழுமையாக 4 ஆண்டுகள் வெற்றிகரமாக தமிழகத்தை வழிநடத்தி பல சாதனைகளை புரிந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


தேர்தல் நேரத்தில் மீண்டும் பிளவு ஏற்படும் கட்சி உடையும் என்று எதிர்பார்த்து வந்த திமுகவினருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு பேரிடியாக விழுந்திருக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate