கல்வி & வேலைவாய்ப்ப

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...!!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சோ்க்கை இன்று முதல் தொடங்குகிறது. பட்டப்படிப்பு சோ்க்கைக்காக இணையதளம் மூலமாக மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அக்.10 முதல் அக். 20 வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2, விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சோ்த்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை அக்.15 முதல் அக்.20 வரை இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி பதிவேற்றலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சோ்க்கை எண்ணிக்கை விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்" அமைச்சர்  தெரிவித்துள்ளாா்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate