கல்வி & வேலைவாய்ப்ப

'40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை! இரண்டு மாத அரசு ஆசிரியர் பணிக்கு வாழ்நாள் முழுக்க பென்ஷனா..' -பள்ளி கல்வித்துறை

தமிழக பள்ளி கல்வி துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 40வயதுக்கு மேலானவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு, இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

பள்ளி கல்வி துறையில் சமீபக்காலமாகவே நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டு உள்ளதாக கூறியிருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 


அதன்படி, வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பு 40 வயது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இனிமேல் 40வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என கூறப்படுகிறது. இந்த அரசாணையின் நகல் அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே பணி நியமனம் இருக்கும் என பேசப்பட்டுவருகிறது. 

மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதான 58 வயது நிரம்பாதவர்கள் தான் இதுவரையில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். 58 வயது வரை உள்ளவர்களுக்கு பணி வழங்குவதால் அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலையே தொடர்ந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஓரிரு மாதங்கள் மட்டுமே அரசு பணியில் இருந்துவிட்டு, பல வருடங்கள் பென்ஷன் வழங்கும் நிலை அரசுக்கு   ஏற்பட்டது. இதனால் அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டிருக்கிறது. 

இதை தவிர்க்கவே 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, வருங்காலங்களில் வட்டார கல்வி அதிகாரி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளதாக என கூறப்படுகிறது .

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate