அரசியல்

"ஒரு பயிரை அதன் செடிகள் மூலம் அடையாளம் காண முடிந்தால், அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன்" - ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் சவால்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா ஒரு பயிரை அதன் செடிகள் மூலம் அடையாளம் காண முடிந்தால், நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் சவால் விடுத்து உள்ளார்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவை சட்டமாக மாறின.

இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா மீது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கடுமையான தாக்குதலைத் தொடுத்து உள்ளார். மேலும் நாட்டில் விவசாயிகளை 'தவறாக வழிநடத்தியதாக' குற்றம் சாட்டினார்.

ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு ஆடு மற்றும் செம்மறி ஆடுகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்றார்.சகோதர-சகோதரிக்கு விவசாய நிலங்களில் உள்ள செடிகள் மூலம் பயிரை அடையாளம் காண முடிந்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் என கூறி உள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate