Trending News

"என்னால் சமூகத்தை மாற்ற இயலாவிட்டாலும், இதை மட்டும் நான் செய்யவே மாட்டேன்", நகைச்சுவை நடிகர் சதீஷ்!

பட்டியலினத்தை சேர்ந்த பெண் நபர் ஒருவரை ஊராட்சி மன்ற தலைவர் என்றும் பாராமல் கீழே அமரவைத்து அவமதித்த சம்பவம் வைரலாகி வருகிறது. அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவர அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை இச்சம்பவத்திற்கு பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சதீஷ் "ஜாதியை காரணம் காட்டி ஊராட்சித் தலைவரையே தரையில் அமரவைத்து அவமதித்தது கொடூர செயல்" என பதிவிட்டிருக்கும் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை கிராம சபை கூட்டத்தின்போது பெண் நபர் ஒருவரை பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி  கீழே அமர வைத்து அவமரியாதை செய்த சம்பவம் சமீபத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியதை அடுத்து இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இதுதொடர்பாக நகைச்சுவை நடிகர் சதீஷ் டுவிட்டரில், “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம் கண்டிக்கத்தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ, ஆனால் நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். அனைவரும் சமம்” என பதிவிட்டுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate