லைப் ஸ்டைல்

பெண்மைக்கான இந்த தினம் பற்றி தெரியுமா?

பெண்களுக்கான தினம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்

ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்றால் முதன் முதலில் நம் நினைவுக்கு வருவது அது சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்பது மட்டும்தான். முந்தைய காலத்தில்  சிசேரியன் என்பது இல்லாமலே இருந்தது. ஆனால் இப்பொழுது நவநாகரீக உலகம் என்று சொல்லிக்கொள்ளும் இந்த உலகத்தில்  மருத்துவமனைகள் என்பது கார்ப்பரேட்டுகள் ஆனதால் இன்று சுகப்பிரசவம் என்ற வார்த்தையே மறைந்து கொண்டு வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆம் நிச்சயமாக சுகப்பிரசவம் இன்று இல்லாமல் போனதற்கு காரணம் கார்ப்பரேட்டுகள் ஆகத்தான் இருக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

இது ஒருபுறம் இருக்கையில் பெண்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்று கூறினர் ஆம் உண்மையில் பெண்கள் அனுபவிக்கும் வலியும் வேதனையும் ஏராளம் எண்ணிலடங்காதவை. ஒரு பெண் ஒரு குழந்தையை சுமக்கும் 10 மாதங்கள் எவ்வளவு வலியும் வேதனையும் அனுபவிக்கிறார் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். 

குழந்தை பிறப்பின் போது ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பம் என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது முந்தைய காலங்களில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் என்ற முறையில் ஒருவர் அல்லது இரண்டு பேர் இருப்பார்கள். அவர்களின் ஆலோசனையின் பெயரிலேயே பெண்கள் குழந்தைகளை பெற்று இருப்பார்கள். ஆனால் தற்பொழுது கூட்டுக்குடும்பம் அழிந்து வருவதும் வீட்டில் ஒரு பெண், குழந்தை பெற்றுக் கொள்வதும் பிரசவத்திற்கான எதிர்மறை எண்ணங்கள் ஆகவே பார்க்கப்படுகிறது. 

இது ஒருபுறமிருக்க பெண்களுக்கு குழந்தை பிறப்பு என்பது ஒரு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சிந்தனைகளை உருவாக்கக்கூடியது. பல பெண்கள் குழந்தை பிறந்ததும் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக காட்டிக் கொள்வார்கள், ஆனால் சிலர் குழந்தை பிறந்ததற்கு பின்னர் மிக பெரிய மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். ஆக குழந்தையை சுமப்பதில் மட்டும் பெண்கள் வலியை உணர்வதில்லை குழந்தை பிறப்பிற்கான மன அழுத்தங்களையும் அவர்கள் தாண்டியே வரவேண்டியிருக்கிறது.. 

அப்பேற்பற்ற பெண்மையை மதிப்பது என்பது வெறும் எழுத்து வடிவில் மட்டும் இல்லாமல், செயல் வடிவிலும் வடிவாக்குவோம் என்பதை இந்த  நாளில் உறுதிபடுத்துவோம்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate