லைப் ஸ்டைல்

காலத்தால் அழியாத கலாம்

இராமநாதபுரத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த அப்துல் கலாம் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் மனிதர் என்று அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். 

ராமேஸ்வரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தேசத்தின் உன்னத தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் அப்துல்கலாம்.

குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக இருந்தார். ராஷ்டிரபதி பவனில் அதிகமான பொதுமக்கள் உள்ளே நுழைய முடிந்த காலகட்டம், கலாமுடைய காலகட்டமாகவே இருக்கும். பெரும்பகுதி விருந்தினர்கள் குழந்தைகள் - மாணவர்கள்தான். அவரைச் சந்தித்துவந்த பலர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிந்தது. 

அவருடன் தொலைபேசியில் பேச முடிந்தது. மின்னஞ்சல் அனுப்பிப் பதில் பெற முடிந்தது. அவருக்குக் கடிதம் எழுதினால், நிச்சயம் பதில் கடிதம் வரும்  என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயமாக இருந்தது. 

அரியலூர் மாவட்டத்தில் எதோ  ஒரு குக் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்  பள்ளி மாணவி ஒருவருக்கு  16 வயதில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர் ஒரு பெற்றோர். ஆனால் அந்த திருமணத்தில் விருப்பம்  இல்லாத அந்த மாணவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்துள்ளார்.

பொதுவாக அப்துல் கலாம் பள்ளி விழாக்களில் கலந்துகொள்ளும் போது அவரின் கைப்பேசி அட்டையை தன்னிடம் கேள்வி நேரத்தில் கேள்வி கேட்கும் மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். அதுப்போல அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அப்துல்கலாம் வந்து சென்றுள்ளார். 

இதனை நினைவில் வைத்திருந்த அந்த மாணவி கேள்வி நேரத்தில் அப்துல்கலாம் கொடுத்த அந்த கைபேசி எண்ணிற்கு   வேறு வழியே இல்லாமல்  தொடர்ப்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரியலூர் காவல்துரையினருக்கு சென்றுள்ளது. அடுத்த சில மணி நேரங்களிலேயே  கலியமூர்த்தி என்ற உள்ளூர் காவல் அதிகாரி அந்த மாணவியை மீட்டு மேற்படிப்பு படிக்க வைத்துள்ளனர். 

தொடர்ந்து படித்து முடித்த அந்த மாணவி தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னனி மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதை சமீபத்தில் தன்னை அமெரிக்காவில் சந்தித்த போது அப்பெண் தெரிவித்ததாக  பெண்ணை மீட்ட கலியமூர்த்தி  என்ற காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுபோல நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படி தனக்கென வாழாமல் நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்து, மாணவர்களிடையே  பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தி மறைந்தவர் அப்துல் கலாம் என்றால் அது மிகையல்ல, அப்படிப்பட்ட உன்னத மனிதரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூறுவோம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate