லைப் ஸ்டைல்

உணவே மருந்து

உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தனி மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் சொன்னார். ஆனால் தனி மனிதனுக்கு இன்று வரை உணவு இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் ஒரு வேளை உணவிற்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பசி, பட்டினி, பஞ்சம் என்பது தலை விரித்து ஆடுகிறது. 

உணவின் தேவை என்பது ஒரு புறம் அதிகரித்து கொண்டிருந்தாலும் மறுபுறம் உணவை வீணாக்கி கொண்டிருப்பவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.  

 ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organisation-FAO) 1945 அக்டோபர் 16 அன்று தொடங்கப்பட்டது. எஃப்.ஏ.ஓ. அமைப்பு தொடங்கப்பட்ட நாள் உலக உணவு நாளாக 1979-ல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் வாழ உணவு கொடுப்பது ஒவ்வொரு அரசின் அவசியம் என ஐ.நா சபை தெரிவிக்கிறது.

மக்களின் வாழ்க்கை முறை காரணமாக எதிர்காலத்தில் பணம் இருந்தாலும் உணவு கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் உணவு உற்பத்தி அதிகரித்தால் தான் எல்லா மக்களுக்கும் உணவு கிடைக்கும் என புரிந்து கொள்ள வேண்டும்.

உலக மக்கள் தொகையில் 79.5 கோடி பேர் பசியிலும், ஊட்டச்சத்து குறைபாட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்ரிக்காவில் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் விவசாயப் பொருட்களை மையப்படுத்தி உலக உணவு நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த வருடமான 2019-ம் ஆண்டில் உலக உணவு நாளுக்கான கருப்பொருள் (theme), ‘நமது செயல்பாடுகளே நமது வருங்காலம். #பசியில்லா உலகத்துக்காக ஊட்டச்சத்து மிக்க உணவு’ என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.  

ஒவ்வொரு ஆண்டும்  உணவின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விவசாயத்தை  காப்பது ஒன்று மட்டுமே உணவு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. 

உணவு தேவை அதிகரிப்பது ஒரு புறம் என்றாலும்,  உணவை உண்ணும் அனைவரும் சத்தானவைகளை உட்கொள்கிறோமா என்று பார்த்தால் அதற்கும் இல்லை என்று தான் பதில் வரும். துரித உணவு என்ற பெயரில் மேலைநாட்டு உணவு பழக்கங்களை மேற்கொண்டு துரித கதியாக நாம் நம் வாழ்வை இழந்து வருகிறோம் என்பது தான் உண்மை. 

சத்தான உணவை உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழவேண்டும் என்பதை  இந்த உணவு தினத்தில்   அனைவரும் நினைவு கூற தக்கவைகளில் ஒன்றாக இருக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate