அரசியல்

அறியாமை காரணமாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பர் - ராமதாஸ்

800 திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் துரோக வரலாற்றுக்கு நடிகர் விஜய் சேதுபதி துணை போகக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின்  வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். 

துணிச்சலுடன் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என நம்புகிறேன்; மாறாக முரளிதரனின் துரோகங்களையெல்லாம் அறிந்த பின்பு நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் அவர் துரோகியாகதான் பார்க்கப்படுவார் என விமர்சித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தபோது சிங்களர்களுடன் சேர்ந்து மகிழ்ந்த துரோகி என சாடிய ராமதாஸ், ஈழத்தமிழர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான் வெளிநாடுகளுக்கு சென்றனர் என்று நக்கலடித்த நயவஞ்சகர் என காட்டமாக கூறியுள்ளார்.

தர்மதுரை திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் காட்சிகளில் தன்னை அவருக்குள் பார்த்தாக கூறிய ராமதாஸ், முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடித்தால் கிரிக்கெட் வீரராக அவரை யாரும் பார்க்க மாட்டார்கள், மாறாக துரோகத்தின் சின்னமாக பார்க்கப்படுவார் என கூறியுள்ளார்.

800 திரைப்படத்தில் நடிக்கப்போவதில்லை என விஜய் சேதுபதி அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார் என்றும், மாறாக தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate