ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 24-ஆம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.

திருப்பதி:-

சேனாதிபதியான உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரி பிரம்மோற்சவ விழா இடையூறு இல்லாமல் தங்குத்தடையின்றி நடக்க அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிவரை வஜ்ர கவச ஆபரணத்தில் தங்கத் திருச்சி வாகனம், இரவு பெரிய சேஷ வாகனம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை சிறிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 18-ஆம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 19-ஆம் தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 20-ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அலங்காரம்), இரவு கருட வாகனம் (கருட சேவை).

21-ஆம் தேதி காலை அனுமந்த வாகனம், மாலை வசந்த உற்சவம், புஷ்ப வாகனம், இரவு யானை வாகனம். 22-ஆம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 23-ஆம் தேதி காலை சர்வ பூபால வாகனம் (தங்கத்தேரோட்டம் ரத்து), இரவு குதிரை வாகனம், 24-ஆம் தேதி காலை பல்லக்கு உற்சவம், கண்ணாடி மாளிகையில் ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு திருச்சி வாகனம் நடக்கிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee