லைப் ஸ்டைல்

World Boss Day 2020, உங்க பாஸ் எந்த ரகம்?

அலுவலகத்தில் அன்றைய நாள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் பெரும்பாலும் அது பாஸின் அணுகுமுறையைப் பொருத்தே அமைகிறது. ஒவ்வொரு பாஸுக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். அந்த அணுகுமுறைதான் உங்களுக்கு அந்த வேலை பிடிப்பதும் பிடிக்காமல் போவதையும் நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் உங்கள் பாஸ் எந்த அணுகுமுறை கொண்டவர் என்பதை 'வேர்ல்டு பாஸ் டே'வான இன்று தெரிந்து கொள்வோமே?

வேலைசெய்யும் இடத்தில் உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்  அடித்தளமிடுபவர் பாஸ் தான் என்றால் அது மிகையில்லை. அலுவலகத்தில் அன்றைய நாள் சிறப்பாக இருக்க வேண்டுமென்றாலும் அது பாஸின் குணத்தைப் பொருத்தே தான் அமைகிறது என்றே கூறலாம். ஒவ்வொரு பாஸுக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். அந்த அணுகுமுறைதான் உங்களுக்கு அந்த வேலை பிடிப்பதும் பிடிக்காமல் போவதையும் நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் உங்கள் பாஸ் எந்த அணுகுமுறை கொண்டவர் என்பதை 'வேர்ல்டு பாஸ் டே'வான இன்று தெரிந்து கொள்வோமே?

சுட்டிக்கார பாஸ் : எந்த முடிவையும் யோசிக்காமல் உடனே உடனே செய்துவிடுவார். நிறுவனத்தின் திருப்திக்காக ஊழியர்களின் மனதையும் காயப்படுத்த தயங்க மாட்டார். மேலிடத்தை திருப்திபடுத்த குழுவினரை அதிக வேலை செய்ய வைத்து சரி கட்டுவார். கடினமான சூழலிலும் சட்டென முடிவெடுத்து பிரச்னைகளை தீர்த்துவிடுவார். அவரின் முடிவில் தெளிவாக இருப்பார். அவர் எடுக்கும் முடிவுகள் தவறாகாது. இப்படி பட்ட நபர்களிடம் ஊழியர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். எப்போது என்ன செய்வார், என்ன முடிவு எடுப்பார் என்பதை யூகங்களால் எளிதாக கூறிவிட முடியாது. 

தோழமையுடன் பழகும் பாஸ் : இவர்கள் ஊழியர்களுடன் நட்புடன் பழகுவார்கள். நன்கு சிரித்து , சிடுசுடுவென இல்லாமல் இருப்பார்கள். வெளிப்படையாக பேசுவார்கள். இதை செய்துகொடுங்கள் என உத்தரவாக இல்லாமல் நட்பு அணுகுமுறையில் கேட்பார்கள். குழுவுடன் சகஜமாக இணைய நினைப்பார்கள். இவர் ஊழியர்களின் தேவை , குறைகளை அறிந்தவராக இருப்பார். அதேசமயம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட விஷயம் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போகும். தொழில் நேர்த்தி குறையாக இருப்பதாக தோன்றும்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட பாஸ் : இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த எதிர்காலத் திட்டங்கள், தொலைநோக்குப் பார்வைகளை அதிகம் கொண்டிருப்பார்கள். நிறுவனத்தால் முடிந்தவற்றைக் கொண்டு அதற்கு ஏற்ப திட்டங்கள் வகுத்து வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்வார்கள். இவர்களுக்கு கீழான குழு சிறந்த அவரின் எதிர்பார்ப்பு, தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இருப்பார்கள். நல்ல குழுவை அமைத்து வழி நடத்துவார்கள். புது புது சிந்தைகளை முன் வைப்பார்கள். அதேசமயம் அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாவிட்டால் பணி நீக்கம் செய்யவும் தயங்க மாட்டார். இவர் நிச்சயமாக கடின உழைப்பாளியே!

அனுபவசாலி பாஸ் : இவருக்கு சந்தைக் குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார். ஒரு நிறுவனத்தில் எப்போது எப்படி காய் நகர்த்த வேண்டும் என எல்லா அனுபவங்களையும் கற்று வைத்திருப்பார். இப்படிப்பட்ட பாஸிடம் ஆணவமும் எட்டிப்பார்க்கும். அதிக அனுபவமும் அவர்களின் கண்களை மறைக்கும். ஆனால் இவரிடமிருந்து பல விஷயங்களை ஆசானாகக் கற்றுக்கொள்ளலாம்.

கடின உழைப்பாளி பாஸ் : இவர்கள் வேலைக்காகவே அர்பணிக்கப்பட்டவர்களைப் போல் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்கள். இவர்களிடம் வேலை மட்டும்தான் பேசும். அதேசமயம் தங்கள் குழுவினரும் அதேபோல் இருக்க வேண்டும் என நினைப்பவர். இவரிடம் தாமதமாக வேலைக்கு வருவது, புராஜெக்டை சரியாக செய்யதது, அடிக்கடி லீவ் போன்ற விஷயங்கள் சற்றும் செல்லுபடியாகாது. புரஃபஷ்னலாக நடந்துகொள்வதையே அதிகம் எதிர்பார்ப்பார். அவர் வந்தாலே குண்டூசி சத்தம் கூட கேட்காது அவ்வளவு ஃபர்பெக்‌ஷன் எதிர்பார்ப்பார். இவரிடம் வேலை நேர்த்தியைக் கற்றுக்கொள்ளலாம். அதேசமயம் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகக் கூடும்...அப்பப்பா..! 

எது எப்படியோ இடத்திற்கு தகுந்தது போல நம்மை மாற்றிக்கொண்டால் யார்வேண்டுமானாலும் பாஸாக மாறிவிடலாமே!

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate