லைப் ஸ்டைல்

கண்ணதாசன் மருத்துவரா?

காரைக்குடி வைத்தியன் கண்ணதாசனை பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

தமிழ் உலகில் பாரதி எனும் கவிஞனுக்கு பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ் குரல்கள் இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்க முடியும். 

கண்ணதாசனுக்கு முன்னதாகவும்  எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதி இருக்கிறார்கள், ஆனால் கண்ணதசனைத்தான் தன மனதில் ஆசனம் போட்டு அமர வைத்து  சீராட்டினார்கள் காரணம் சினிமா பாட்டிற்குள் வாழ்க்கையை தேன் கலந்து கொடுத்த சித்த மருத்துவ காரன் கண்ணதாசன். 

காதலியை வெட்டு குத்து கொல்லு என பாடப்பட்டு வரும் இந்த காலத்தில் எங்கிருந்தாலும் வாழ்க என்பதை தாரக மந்திரமாக ஆக்கிய கவிஞனின் வரிகள் வாழந்து கொண்டே தான் இருக்கிறது இன்னுமும். 

ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையில் எத்தனை எத்துணை சம்பவங்கள்  தோல்விகள்,வெற்றிகள், காயங்கள், சங்தோஷங்கள் என அத்தனைக்கும் மருந்து போட்டவர் காரைக்குடி மருத்துவன் கண்ணதாசன். 

இவரின் பாடல்கள் பாமரன் முதல் படித்தவர் வரை எடுத்து படிக்கும் புதிய கீதையாகவே பார்க்கப்பட்டது. எம்ஜி.ஆர் சிவாஜி மட்டும் இல்லாமல் இசை அமைப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவருடனும் நட்பாக பழகியவர் கண்ணதாசன்.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தனது வாழ்ககையை தொடங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவர் ஆனார். 

இந்து மதத்தின் மீது அதீத அன்பு கொண்டதால் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற தொகுப்பை இவர் எழுதியிருந்தாலும் இயேசு காவியத்தையும் இவரே எழுதினார் என்பது கூடுதல் சிறப்பை பெற்றது.  சந்தோசம் ,துக்கம் ,வலி ,வேதனை என்று அனைத்து பாடல் வரிகளையும் அள்ளி வீசிய கவிஞன். 

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ என எழுதி வைத்தார் கவியரசன்.  அனால் கடைசி வரை மனித வாழ்வில் உடன் வரும் இவரின்  வரிகள் சாகா வரம் பெற்ற வரிகள்.காரணம் கவியரசர் சாகா வரம் பெற்ற கவிஞன். 

தன் கடைசி பாடலான கண்ணே கலைமானே என்ற பாடல் மூலம் அனைவரும் உறங்க தாலாட்டு பாடலை எழுதிய கவிஞன் அந்த வரிகளோடு முழுவதுமாக தூங்கிப்போனார். 

கண்ணதாசன் மறைந்தாலும் அவரின் பாடல் வரிகள் சாக வரம் பெற்றவை. அப்பேற்பட்ட கவிஞனின் நினைவு  நாளில் அவரை நினைவு கூறுவோம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate