அரசியல்

அதிமுகவை கட்டிக்காத்த தியாகிகளை நினைவு கூர்வோம் - இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கடிதம்

அதிமுகவின் 49-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மாபெரும் இயக்கமான அதிமுகவின் பொன்விழா அடுத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், இந்தாண்டு நாம் ஆற்றப்போகும் பணிகள் அதற்கு முன்னோட்டமாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

1972ஆம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர். வெற்றிகளை பெற்று தமிழகத்தில் புதிய வரலாறு படைத்தார் என புகழாரம் சூட்டியுள்ளனர்.எம்.ஜி.ஆர். பாதையில் பொற்கால ஆட்சியை நடத்திய ஜெயலலிதாவால் அதிமுக மகத்தான அரசியல் இயக்கமாக உருவெடுத்து மக்கள் பணிகளில் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளனர்.  இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகும் அதிமுகவையும், அவர்கள் வகுத்து தந்த அரசையும் ஒற்றுமை உணர்வோடு கட்டிக்காத்து வருவதாக கூறியுள்ளனர். 

அடுத்தாண்டு அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டத்தின்போது அதிமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் வரலாற்று சாதனையை படைக்க தொண்டர்களே வாருங்கள் என இரு தலைவர்களும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். 2015-ம் ஆண்டு ஜெயலலிதா சூளுரைத்து செய்து காட்டியது போல, பொன்விழா ஆண்டில் அதிமுக ஆட்சியே தொடரும் என சபதம் ஏற்போம் என சூளுரைத்துள்ளனர். 

உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கி அதிமுகவை கட்டிக்காத்த தியாகிகளை நன்றியுடன் நினைவு கூர்வோம் என்றும் தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கடிதம் எழுதியுள்ளனர். 

முதலமைச்சர் வேட்பாளர்கள் குழப்பங்களுக்கு பிறகு, இருவரும் இணைந்து கடிதம் எழுதியதால்  அதிமுக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate