சினிமா

விஜய்யின் அப்பா இயக்கும் படத்தில் சமுத்திரகனியுடன் ஆக்‌ஷனில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை! இப்படி ஒரு திருப்புமுனையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை தற்போது சமுத்திரகனியுடன் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க இருக்கிறார். நடிகை சாக்‌ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் போன்ற மாஸ் படங்களில் நடித்திருந்தாலும் கூட தன் இருப்பை தமிழ் திரையுலகில் இன்னும் உறுதிப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கடந்த வருடம் நுழைந்திருந்தார். அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து அவற்றில் நடித்து வரும் சாக்‌ஷிக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு திருப்புனை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

நடிகை சாக்‌ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் போன்ற மாஸ் படங்களில் நடித்திருந்தாலும் கூட தன் இருப்பை தமிழ் திரையுலகில் இன்னும் உறுதிப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் கடந்த வருடம் நுழைந்திருந்தார். அவர் நுழைந்ததன் நோக்கம் இனிதே நிறைவேறியிருப்பது அவரின் அடுத்ததாக நடித்து வரும் படங்களும் உறுதிப்படுத்தகின்றன. சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வரும் சாக்‌ஷிக்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒரு திருப்புனை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

இது போக, ஆக்‌ஷன் காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து வேறொரு படத்திலும்  சாக்‌ஷி அகர்வால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கும் இந்த புதுப்படத்தில் தான் ஒப்பந்தமாகியிருக்கிறாராம் நடிகை சாக்‌ஷி அகர்வால். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவருகிறார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் இவர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 
View this post on Instagram

NAAN KADAVUL ILLAI

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate