இந்தியா

உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுட்டுக்கொலை....!!

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மண்டல பராதிய ஜனதா தலைவர் டி.கே.குப்தா அதே பகுதியில் கடை ஒன்று நடத்தி வருகிறார். நேற்று இரவு குப்தா வழக்கம் போல தனது கடையை அடைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென குப்தாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். போலீசார் விசாரணை கொலை பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

பலத்த காயமடைந்த குப்தாவை மீட்டு ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் பகை காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. 

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள துண்ட்லா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக குப்தா பிரச்சாரம் செய்த நிலையில் அவர் கொல்லப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate