சினிமா

"அவனால் தாங்கிக்கொள்ள முடியாது, எனவே கொரோனா காலக்கட்டத்தில் தற்கொலை முடிவை கைவிட்டேன்" ரேணிகுண்டா பட நடிகை சனுஷா!

மன அழுத்தம் என்பது ஏதாவது ஒரு வகையில் நம்மை தாக்க தான் செய்கிறது. அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பவர்களின் நிலை சற்று மோசமானது தான். இதற்கு சினிமா நடிகைகளும் விதிவிலக்கல்ல. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தற்கொலை முடிவெடுத்த நடிகை எதனால் அதை கைவிட்டார் என்னும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனது தாய்மொழியாக மலையாளத்தை கொண்ட நடிகை சனுஷா தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் நடித்திருந்தார்.  சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட தன் சாந்தமான நடிப்பால் கொள்ளை கொள்பவர் இவர். ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்த இவர் தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். 

இவர் கொரோனா காலகட்டத்தில், தான் தற்கொலை செய்யவிருந்ததாகவும் அந்த இக்கட்டான எவ்வாறு கடந்து வந்தார் என்பது குறித்தும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். 

அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்” என கூறியிருந்தார். 

மன அழுத்தம் என்பது ஏதாவது ஒரு வகையில் நம்மை தாக்க தான் செய்கிறது. அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் பல மாதங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பவர்களின் நிலை சற்று மோசமானது தான். குடும்பங்களுடன் ஒன்றாக இருந்துவந்தவர்கள் இதற்கு சற்று விதிவிலக்கு எனலாம். இதற்கு தீர்வு இருக்கிறதா என்று யோசித்தால்  மனம்விட்டு பேசுவது மட்டும் தான் என்பது விளங்கும். 

View this post on Instagram

I'm sharing one of the comment section that appeared to be on Manorama online story about me and the mental health struggle I've gone through which I shared personally in my YouTube channel. I shared it because I believe at least one person might get help after knowing there are people out there who's going through it & trying just like YOU. See guys I've already told you how SOME IDIOTS take this mental health issues and when someone openly talks about it- this is how they behave. This is how they RUIN it for many people.. I'm sure they are a bunch of sick people who belong to such categories in our society where such stigmas still works out more than truth & wellness. I just have lots of pity for these stupid people who's living in our society thinking they're full of "BUDHI AND BODHAM" yet they suffer from "VIVARAMILLAYMA". GOOD THAT YOU GUYS DONT HAVE IT AND I PRAY NONE OF YOU GO THROUGH SUCH SHIT BECAUSE GOD FORBID, YOU WONT BE ABLE TO HANDLE IT WITH SUCH LIGHTNESS ???????? DEPRESSION, ANXIETY AND OTHER SUCH MENTAL HEALTH ISSUES are A VERY SERIOUS ISSUE we all are going through .. AND, if you CANT HELP, STAY SHUT WITH YOUR STUPIDITY & BROKEN ASSES.

A post shared by Sanusha Santhosh???? (@sanusha_sanuuu) on


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate