சினிமா

இசைக்கான முக்கியதுவம் அவசியம், பிசாசு 2 படத்தில் மிஷ்கினோடு இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

முன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். சைக்கோ படத்தின் அடுத்த பாகம் தான் அவர் அடுத்த படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், "பிசாசு 2" படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். முதன்மை கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு' திரைப்படம்  வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. கடைசியாக அவர் எடுத்து வெளியாகிய சைக்கோ திரைப்படமும் கூட மிகுந்த வரவேற்பை பெற்றது. சைக்கோ படத்தின் அடுத்த பாகம் தான் அவர் அடுத்த படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், "பிசாசு 2" படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். முதன்மை கதாபாத்திரமாக ஆண்ட்ரியா நடிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  எதிர்பார்ப்பு உள்ள இந்த படத்தில் இசையமைப்பாளராக கார்த்திக் ராஜா இணைந்திருப்பதாக மிஷ்கின் தெரிவித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியபோது, "பிசாசு படம் கொண்டாடப்பட முக்கிய காரணிகளில் ஒன்று, அதன் தவிர்க்கமுடியாத இசையும் ஆகும். பிசாசு 2 கதையை உருவாக்கியபோது உணர்ச்சி ததும்பும் கதையில் இசைக்கான முக்கியதுவம் விட்டுப்போய்விடக்கூடாது என நினைத்தேன். இசையும் உணர்வுகளும் இரண்டறக் கலந்து இக்கதையை கூற நினைத்தேன்.

தற்போது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவுடன் இப்படத்திற்காக இணைந்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது இசை பிரபலமான, பல படங்களுக்கு உயிர் தந்திருக்கிறது. அவருடன் இசையமைக்கும் பணியின் ஒவ்வொரு தருணமும் பெரும் சந்தோஷத்தை தருவதாக அமைந்திருகிறது. இன்னும் நெகிழ்வான, சிறப்பான தருணங்களை, இந்த இசைப்பயணம் இருவருக்கும் தருமென நம்புகிறேன்" என்றார். ஒருவேளை 'சைக்கோ 2' திரைப்படம் இயக்கப்பட்டாலும் இதே போலான வரவேற்பு இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate