இந்தியா

PTI மற்றும் UNI செய்தி நிறுவனங்களுடன் தொடர்பை முறித்துக் கொண்ட 'பிரசார் பாரதி' - பின்ணணி என்ன...?

பல வருட காலமாக PTI நிறுவனத்துடன் பரஸ்பர இணக்கத்துடன் இருந்து வந்த பிரசார் பாரதி தற்போது அந்த நிறுவனத்துடனான தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொண்டுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் இந்த செய்தி நிறுவனங்களிடம் இருந்து எந்த விதமான தரவுகளையும் பெற்று செய்திகள் வெளியிடப்படாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. 'PTI - பிரச்சார் பாரதி' உறவில் விழுந்துள்ள விரிசலின் பின்னணி என்ன என்பதனை இந்தப் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்:-

இந்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு நிறுவனமான 'பிரசார் பாரதியின்' கீழ் அரசாங்கத்தின் 'தூர்தர்ஷன்' மற்றும் 'ஆல்-இந்தியா-ரேடியோ' ஆகிய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு ஊடகங்களையும் மேலாண்மை செய்து வரும் பிரசார்  பாரதி, பிரபல செய்தி நிறுவனங்களான ANI, PTI, UNI  உள்பட பல  செய்தி  நிறுவனங்களுடன் சந்தா மற்றும் ஒப்பந்த முறையில் செய்தித் தரவுகளைப் பெற்று அரசு ஊடகங்களில் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், PTI  மற்றும் UNI  செய்தி நிறுவனங்களுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாக 'பிரசார்  பாரதி' தெரிவித்துள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் இந்த செய்தி நிறுவனங்களிடம்  இருந்து எந்த விதமான தரவுகளையும் பெற்று செய்திகளை வெளியிடக்கூடாதென்று  ஆல் இந்திய ரேடியோ மற்றும் தூர்தர்ஷனுக்கு பிரசார்  பாரதி அறிவுறுத்தியுள்ளது.பிரசார்  பாரதி, PTI  செய்தி நிறுவனத்திற்கு அதிகளவில் ஆண்டு சந்தா செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு  6.15 கோடி வரை பிரசார்  பாரதி PTI செய்தி நிறுவனத்திற்கு சந்தாவாக செலுத்தி வருவதாக அதன்  தலைவர் சமீர் குமார் தெரிவித்துள்ளார். பிரசார் பாரதிக்கு பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி தரவுகள் வழங்கி வருகின்றன. ஆனால் பிரசார் பாரதி PTI  செய்தி நிறுவனத்திற்கு தான் அதிக சந்தா செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
பிரச்சார்  பாரதியின் பிரதான செய்தி நிறுவனமாக இருந்து வந்த PTI செய்தி நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் பிரசார் பாரதியுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தற்காலிக  ஒப்பந்த அடிப்படையில் PTI  செய்தி நிறுவனத்திடம்  இருந்து செய்திகளை பெற்று வரும் பிரசார்  பாரதி, சமீபமாக PTI  நிறுவனத்தின் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அதன் செய்திகள் வாயிலாக கண்டறிந்துள்ளது. 

PTI வெளியிடும் செய்திகள் தேச ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கிலும் இருப்பதாக  கூறி  பிரசார் பாரதி PTI நிறுவனத்தை முன்னரே எச்சரித்திருந்தது. 
பல வருட காலமாக PTI  நிறுவனத்துடன் பரஸ்பர இணக்கத்துடன் இருந்து வந்த பிரசார பாரதி தற்போது அந்த நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளதன் பின்னணி  குறித்து விவரமாக பார்க்கலாம்:-

கடந்த சில வருட காலமாகவே  PTI செய்தி நிறுவனம் தவறான செய்திகளை பொது ஊடக வெளியில் திணித்து வருவதாக குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக  PTI  நிறுவனம் குடியுரிமை சட்ட போராட்டத்தின் போது  தவறான தகவல்களை பொது வெளியில்  வெளியிட்டு உண்மைக்கு புறம்பாக செயல்பட்டது.

அதைத் தொடர்ந்து,  கடந்த ஜூன் மாதம் லடாக்கில் கல்வான்  பள்ளத்தாக்கில் இந்திய சீனா ராணுவ வீரர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக PTI செய்தி நிறுவனம், இந்தியாவுக்கான சீன தூதரை அழைத்து நேர்காணல் ஒன்று நடத்தியது.

இந்த பேட்டியில் சீன தூதர் சன் வெய்துங், இந்திய – சீன எல்லையில் அமைதியை பராமரிக்கும் பொறுப்பு இந்தியாவின் வசம்தான் உள்ளது. சீனாவிற்கு அந்த பொறுப்பு இல்லை. மேலும், இந்திய வீரர்கள் தான் எல்லையில் அத்துமீறினார்கள், அவர்கள் இந்திய – சீன எல்லையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் கூறியிருந்தார்.
அந்த நேர்காணலை முடித்துக் கொண்டு செய்திகளை PTI நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக தவறாக திரித்து பொதுவெளியில் வெளியிட்டது. 

இந்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட PTI நிறுவனத்தின் சமூக விரோத போக்கை பலரும் கண்டித்தனர். அப்போது பிரச்சார்  பாரதியும் PTI  நிறுவனத்தை கண்டித்தது. சீனாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக பிரசார்  பாரதி PTI மீது குற்றம்சாட்டியது.

இதுபோன்று PTI செய்தி நிறுவனம் சீன சார்பு செய்திகள் மற்றும் தேவையற்ற செய்திகளை வெளியிட்டு பொதுவெளியில் தேவையற்ற குழப்பத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது பிரசார் பாரதி PTI செய்தி நிறுவனத்துடனான தனது தொடர்பை முற்றிலுமாக முறித்துக் கொண்டுள்ளது. 

மேற்கண்ட காரணங்களின்   பின்னணியில் தான் PTI க்கு தடைவிதித்துள்ளது பிரசார் பாரதி.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate