சினிமா

ஒருநாளுக்கு இத்தனை லட்சங்களா?? வைரலாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் சம்பள பட்டியல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வைரலாகிவருகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு பிரபலம் இத்தனை லட்சம் சம்பாதிக்கின்றாரா என்னும் மக்களின் ஆச்சரியாத்தால் இந்த செய்தி தீயாக பரவிவருகிறது. சம்பள தகவலை மிகவும் ரகசியமாக குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி வைத்திருக்கும் பட்சத்தில், வைரலாகிவரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவரும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியது வைரலாகிவருகிறது. விஜய் டிவியில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 8 ஆண்கள் 8 பெண்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக  உள்ளே நுழையதற்போது 17 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டினுள் உலாவிவருகின்றனர். 

பங்கேற்றுவரும் அனைத்து போட்டியாளர்களுமே திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பதால் கடந்த சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரொம்பவே விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது குறித்த பட்டியல் விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ரம்யா பாண்டியன், ஆரி, ஜீத்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தெரியவந்திருக்கிறது. மீதமுள்ள போட்டியாளர்களான அனிதா சம்பத், கேப்ரியல்லா சார்ல்டன், சோம் சேகர் மற்றும் ஆஜீத் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அந்த பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனாலும் சம்பள தகவல் மிகவும் ரகசியமானது என்பதால் சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate