Just In

நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் கட்சி வரலாற்று வெற்றி பெற்று சாதனை!!!!

நியூசிலாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்று தேர்தல் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆக்லாந்து:-

நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் மைய-இடதுசாரி தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

New Zealand PM Jacinda Ardern casts vote early in country's general election  - National | Globalnews.ca
இதன் மூலம் தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் ஜசிந்தா ஆர்டெர்னின் மைய-இடதுசாரி தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது. இதன் கூட்டணி கட்சியான பசுமை கட்சி 7.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 1930 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பெரிய சதவீத வாக்குகளை எந்த கட்சியும் கைப்பற்றியது இல்லை. 

அதேபோல் 1996 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து விகிதாச்சார வாக்கு முறை அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தலிலும் ஜசிந்தாவின் கட்சி தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியான நேஷனல் கட்சி வெறும் 27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தேர்தலில்தான் மிகக்குறைந்த வாக்கு சதவீதம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate