உலகம்

முகமது நபியின் புகைப்படத்தை காட்டிய பிரான்ஸ் பள்ளி ஆசிரியர் தலை துண்டித்து கொலை!!!

முகமது நபியின் படத்தை மாணவர்களிடம் காட்டிய பள்ளி ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து உள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இது கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டதோடு நாட்டு மக்கள் அனைவரும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

பாரிஸ்:-


பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியர் ஒருவர் கருத்து சுதந்திரம் தொடர்பாக வகுப்பில் தனது மாணவர்களுக்கு முகமதுநபி தொடர்பான புகைப்படங்களை காட்டி உள்ளார். முகமது நபியின் புகைப்படங்களை காட்டிய அந்த ஆசிரியரை மர்மநபர் ஒருவர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த போலீசார் ஆசிரியரை கொலை செய்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு வடமேற்கில் புறநகர் பகுதியான கான்ஃப்ளேன்ஸ் செயின்ட் ஹனோரைன் (Conflans Saint-Honorine) என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்:- 

Chechen, 18, suspected of beheading teacher in France

இது ஒரு கோழைத்தனமான தாக்குதல், பள்ளி ஆசிரியர் ஒருவர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் இந்த கொடூர பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரெஞ்சு போலீசார் கூறுகையில்:-
 
கொலையுண்ட ஆசிரியரின் பெயர் சாமுவேல் பேட்டி (Samuel Paty). அவருக்கு  47 வயதாகிறது. அவரை கொலை செய்த நபர் செசென்யா (Chechnya) நாட்டை சேர்ந்தவர். அவருக்கு பதினெட்டு வயது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் ஒரு துப்பாக்கி இருந்தது, அந்த துப்பாக்கியைக் கீழே போடுமாறு அறிவுறுத்திய போது, போட மறுத்ததை அடுத்து சுட்டோம் என்று பிரான்ஸ் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samuel Paty
France terror attack: 47-year-old 'decapitated' in Paris suburb named as  teacher Samuel Paty | World News | Sky News

அதே சமயம் அவர் வைத்திருந்தது ஒரு ஏர்ஸாஃப்ட் கன் என்றும், அதில் பிளாஸ்டிக்கால் ஆன புல்லட்டுதான் இருந்தது என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் ராய்ட்டர் உள்ளிட்ட பிரபல ஊடகங்கள் ஆசிரியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

மேலும், ஆசிரியரை  கொலை செய்த அந்த நபர் அல்லாஹு அக்பர் (கடவுளே மேன்மையானவர்) என்று கத்தியதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலையுண்ட ஆசிரியரின் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவனின் பெற்றோர் தெரிவித்ததாவது:- 

ஆசிரியர், முகமது நபியின் புகைப்படத்தை காட்டுவதற்கு முன்பாக வகுப்பிலுள்ள இஸ்லாமிய மாணவர்கள் கைகளை தூக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர்களை சிறிது நேரம் வெளியே இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

முகமது நபியின் புகைப்படத்தை காட்டுவது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே அவர் இவ்வாறு அவர்களை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறு கூறியுள்ளார், என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம் என்று அந்தப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்து 2015 ஆம் ஆண்டு பிரான்சின் பிரபல சார்லி ஹெப்டோ பத்திரிக்கை முகமது நபி தொடர்பான கார்ட்டூன் வெளியிட்டதற்காக, அந்த நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee