Just In

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நெருங்கிய தொடர்பு- ஸ்வீடிஸ் நார்டிக் தகவல்

ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை ஸ்வீடிஷ் நோர்டிக் கண்காணிப்பு இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்:-

துருக்கி அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகனுக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை ஸ்வீடிஷ் நோர்டிக் மானிட்டர் வலைதளம் வெளியிட்டுள்ளது.

எர்டோகன், தனது சொந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும், தனது அஜெண்டாக்களை செயல்படுத்துவதற்கும், தனது அரசியல் எதிரிகளை அழிப்பதற்கு பயங்கரவாத அமைப்புகளை பயன்படுத்துவதாக அந்த வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது.

Swedish website reveals new documents about Erdogan's involvement in  recruiting terrorists in Syria – Syrian Arab News Agency

கடந்த 2017 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தாக்கிய ஐஎஸ் அமைப்பை  சேர்ந்த அப்துல் அப்துல் காதிர் மஷரிபோவ் முன்நின்று நடத்தினான். இந்த தாக்குதலானது மதபோதகர் ஃபெத்துல்லா குலன் என்பவரை பழிவாங்கும் நோக்கத்திற்காக துருக்கி அதிபர் எர்டோகன் ஏற்பாடு செய்தது என்று சனா செய்தி நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுக்களுடனும் எர்டோகன் தொடர்பு வைத்துள்ளது மேற்கண்ட இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தயிப் எர்டோகன் வணிக ஒப்பந்தங்கள் செய்துள்ளார். அந்த ஒப்பந்தங்கள் மூலமாக சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து எண்ணங்களை திருடி வாங்கி வருவதும் தெரியவந்துள்ளது.

துருக்கி மூலமாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக சிரியாவில் ஏராளமான பயங்கரவாத நடவடிக்கைகளை எர்டோகன் நடத்தி வருவதும் இந்த அறிக்கைகளில் மூலம் தெரியவந்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate