விளையாட்டு

அனல் பறக்குமா? இன்றைய போட்டி

இன்றையப் போட்டி ஷார்ஜா மைதனாத்தில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்கள் பங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என கூறப்படுகிறது.

ஐ.பி.எல் 2020 தொடரின் டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் 13-வது சீசனில் சி.எஸ்.கே அணி தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. 

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சி.எஸ்.கே 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு சி.எஸ்.கே தகுதி பெற வேண்டுமென்றால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பவுலர்கள் சி.எஸ்.கே அணியில் இருந்து பந்துவீசினார்கள். 

கர்ன் சர்மா, பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்து இருந்தனர். துபாய் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றாற்போல் இருந்ததால் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தனர். இன்றையப் போட்டி ஷார்ஜா மைதனாத்தில் நடைபெறுவதால் பேட்ஸ்மேன்கள் பங்கு அதிகமாக இருக்கும். 

இதனால் மேலும் ஒரு பேட்ஸ்மேன் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ்க்கு பதிலாக களமிறங்கிய ஜெகதீசன் 33 ரன்கள் சேர்த்தார். மேலும் ஒரு பேட்ஸ்மேன் உடன் களமிறங்க சி.எஸ்.கே திட்டமிட்டால் ஜெகதீசனுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சி.எஸ்.கே அணி : சாம் குரான், ஷேன் வாட்சன், டூ-பிளசிஸ், அம்பதி ராயுடு, ஜெகதீசன், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், சர்துல் தாகூர், கர்ன் சர்மா/பியூஷ் சாவ்லா,.

சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியிலும் தோல்வியையே சந்தித்ததால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate