உலகம்

உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94வது இடம்

உலகப் பட்டினிக் குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளது. நமது அண்டைநாடுகளான வங்கதேசம் 75 வது இடத்திலும், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் முறையே 78 மற்றும் 88 வது இடத்திலும், 73 வது இடத்தில் நேபாளமும், இலங்கை 64 வது இடத்திலும் உள்ளன.

புதுடெல்லி:-

"உலகப் பட்டினிக் குறியீடு 2020" தரவரிசையில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியல், மூலம் இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் விகிதம் மிகவும் கவலைதரும் வகையில் உள்ளது. அதாவது 27.2 ஆக இருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

India ranks 94th on Global Hunger Index, below Pakistan, Nepal and  Bangladesh | Deccan Herald

இந்த பட்டியலை  வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடு உள்ளது.
நான்கு அளவுகோல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.

சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும் 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

Global Hunger Index 2020: 107 देशों में भारत 94वें नंबर पर, 14% जनसंख्या  कुपोषण का शिकार - MPLive.co.in

ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியாவில் மிகக்குறைவாக 3.7% ஆக உள்ளது.


தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக நிலையில் டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

உலகம் முழுதும் 69 கோடி மக்கள் இன்னமும் ஊட்டச்சத்தின்மையினால் அவதிப்பட்டு வருவதாக இதே அறிக்கை கூறுகிறது. வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளை கோவிட்-19 வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது.

“2030-ம் ஆண்டில் பட்டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சி இலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி இப்படியே போனால் 37 நாடுகள் பசியைக் குறைக்கும் விகிதத்திலும் பின்னடைவே காணும்.  

எனினும், 132 நாடுகளில் பட்டினியால் வாடும் மக்களின் விவரங்களைக் கணக்கெடுத்த இந்த ஆய்வில், 107 நாடுகளின் புள்ளி விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே பதிவான புள்ளி விவரங்கள் என்றும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தாக்கம் இதில் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பட்டினிக் குறியீட்டில் வளரும், ஏழை நாடுகளை மேலும் கிழ்நிலைக்கே தள்ள வாய்ப்பு. நம் உணவு அமைப்பு முறைகள் பட்டினியை முற்றிலும் ஒழிக்க, பூஜ்ஜியமாக்க போதாதவையாக உள்ளன” என்று இந்த அறிக்கை நாடுகளை எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியா இந்த தரவரிசை பட்டியலில் 117 நாடுகளில் 102வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 8 இடங்கள் முன்னேறி 94வது இடத்தைப் பிடித்தாலும், வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை விட இந்தியாவை பின்தங்கியிருப்பது கவலையை அளிக்கிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee