இந்தியா

ட்வீட்டர் நிறுவனம் புது விளக்கம்?

பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

உலகம் முழுதும் ட்விட்டர் கணக்குகள் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நேற்று பிற்பகலில் திடீரென முடங்கியது. இதனால் தங்களுக்கு வந்த ட்வீட்களை பார்க்கவோ, ட்வீட் செய்யவோ முடியாமல் பயனாளர்கள் அவதியடைந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மனி நேரத்திற்கு பின் ட்விட்டர் கணக்குகள் மீண்டும் இயல்பாக செயல்படத் தொடங்கின. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள ட்விட்டர் நிறுவனம், உள்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ட்விட்டர் முடங்கியதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது. 

மேலும் பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. உலக அளவில் தலைவர்கள், பிரபலங்கள் 100யில் 70 சதவீதம் பேர் ட்வீட்டர் கணக்குகள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate