இந்தியா

சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வை அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 7 மாத இடைவெளிக்குப் பிறகு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 250 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது. 

தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றும், மலையேறுவதற்கு தகுதியானவர் என மருத்துவர் அளிக்கும் சான்றும் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட சம்பவம் ஐயப்பன் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate