உலகம்

டிரம்ப் போன்ற மிகவும் மோசமான நபரை இதுவரை சந்தித்ததில்லை- ஜெனரல் ஜான் கெல்லி

அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற “மிகவும் மோசமான, குறைபாடுள்ள நபரை” இதுவரை சந்தித்ததில்லை என்று வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியும், ஓய்வுபெற்ற மரைன் ஜெனரலுமான ஜான் கெல்லி, கூறியுள்ளார்.

வாஷிங்டன்:-

வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஓய்வு பெற்ற கடற்படை ஜெனரல் ஜான் கெல்லி, ஜனாதிபதி டிரம்ப் குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது அமெரிக்க தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரி ஜெனரல் ஜான் கெல்லி,  தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தனது வாழ்நாளில் ஜனாதிபதி டிரம்ப் போன்ற ஒழுக்கமற்ற, மோசமான குறைபாடுடைய ஒரு நபரை சந்தித்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த ஜெனரல் ஜான் கெல்லி, பின்னர் வெள்ளை மாளிகையின் முதன்மை அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.ஆனால், ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2018 டிசம்பர் மாதம் ஜெனரல் ஜான் கெல்லி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

டிரம்புடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது பரிதாபகரமான செயல் என குறிப்பிட்டிருந்தார் ஜான் கெல்லி. டிரம்ப் குறித்து பேசிய ஜான் கெல்லி, அவரது நேர்மையின்மையின் ஆழம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி, டிரம்பின் ஒழுக்கமற்ற செயற்பாடு, ஆட்சியில், அவர் மேற்கொள்ளும் முடிவுகளில் பிரதிபலிப்பதாகவும் ஜெனரல் ஜான் கெல்லி கூறியுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee