உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்; ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்:-

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த வாரம் பென்சில்வேனியாவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடனுக்காக பிரச்சாரம் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

77 வயதாகும் ஜோ பிடன், ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருமுறை இருந்தபோது இவர் இருமுறை துணை அதிபராக இருந்துள்ளார். 

இந்த பிரச்சாரத்தின் போது டிரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிகிறது. டிரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஒபாமாவின் பிரச்சாரம் குறித்து தனது ஆதரவாளர்களிடையே டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘ஒபாமா ஒரு பிரயோஜனமற்ற பிரச்சாரகர். இது 2016 ஆம் ஆண்டைப் போலவே எனக்கு ஒரு நல்ல செய்தி. அந்த தேர்தலில் அவர்கள் மோசமான பணிகளை செய்தார்கள், அதனால்தான் நான் உங்கள் ஜனாதிபதியாக இருக்கிறேன்’ என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate