உலகம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிகப்பெரிய காட்டுத்தீ

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ ஒரே நாளில் 23,000 ஏக்கருக்கு மேல் எரித்து சாம்பலாக்கியுள்ளது.

டென்வர்:-

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தி உள்ளது.
அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் வனப்பகுதிகளில் கடந்த ஆகஸ்டில் ஏற்பட்ட காட்டுத்தீ இதுவரை சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான காடுகளை அழித்துள்ளது.

வேகமாக பரவிய காட்டுத்தீ அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் உட்பட ஆயிரக்கணக்கானோரின் வீடுகளை எரித்து சாம்பலாகியுள்ளது. மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் வீசும் காற்றும் காய்ந்த வனப்பகுதிகளும் தீ வேகமாக பரவுவுதற்கு காரணமாகி உள்ளது.

இதுவரை 56 சதவீதம் மட்டுமே காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயின் காரணமாக அம்மாகாணத்தில் உயிர்ச் சேதம் பற்றி தகவல்கள் எதுவும் இல்லை.

கடந்த புதன்கிழமை மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசிய காற்று ஒரே நாளில் 20,000 ஏக்கர் (8,100 ஹெக்டேர்) அளவிற்கு எரித்து நாசமாக்கியது. தீ விபத்து காரணமாக கிழக்கே ஃபோர்ட் காலின்ஸ் நகரம் புகை மூட்டத்தால் மூடியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate