உலகம்

'உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகளே காரணம்- டிரம்ப்

உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா நாடுகளே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது நிர்வாகம் சுற்றுச்சூழலை தூய்மையாக்குவதில் பெரும் பணியாற்றியுள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்:-

''உலகில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளே காரணம்,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்காவில், அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் நிறுத்தப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு, டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், டிரம்ப் நேற்று பேசியதாவது:உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தான் காரணம். காற்றில், அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை, இந்த நாடுகள் தான் வெளியேற்றுகின்றன.

அமெரிக்காவைப் பொறுத்த வரை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. பிளாஸ்டிக்குக்குப் பதிலாக, காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. குளிர்பானத்தை, ஸ்ட்ராவுக்குப் பதிலாக, காகிதத்தில் குடிக்க முடியுமா அமெரிக்க வேலை, அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதற்கு எப்போதும் நான் முன்னுரிமை அளிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும், நம்மிடம் சிறந்த சுற்றுச்சூழல் எண்கள், ஓசோன் எண்கள் உள்ளிட்ட பல எண்கள் உள்ளன. ஆனால் , சீனா, ரஷ்யா, இந்தியா இந்த நாடுகள் அனைத்தையும் அவர்கள் காற்றில் பறக்க விடுகின்றன, ” என்றும் கூறினார்.

முன்னதாக, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தால் சீனா, இந்தியா போன்ற நாடுகள் தான் அதிகம் பயனடைகின்றன, ஆனால் அந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்றும் கூறினார். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த விஷயத்தில் டிரம்ப்பின் பார்வை அப்படியே உள்ளது. நேர்மையாக, பிரச்சாரத்தை அணுகுவதை விட்டுவிட்டு மற்ற நாடுகள் மீதும் பிறரின் மீதும்  குற்றம்சாட்டி பிரச்சனைகளை திசைதிருப்புவதையே வழக்கமாக கையாண்டு வருகிறார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate